தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார். லாக்டவுன் நேரத்தில் விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசி ரசிகர்களை ஆத்திரத்தை அதிகரித்தார். 

இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கமெண்ட் போட ஆரம்பித்தனர். வாயால் சொல்ல முடியாத அளவிற்கு அர்ச்சனைகளை வாங்கினாலும் மீரா மிதுன் அடங்கியதாக தெரியவில்லை. என்னை இப்படி கெட்ட, கெட்ட வார்த்தைகளில் திட்டுறீங்களே... விஜய் பொண்டாட்டி சங்கீதாவைவும், சூர்யா பொண்டாட்டி ஜோதிகாவையும் அந்த வார்த்தைகளை சொல்லி நான் கூப்பிட்டால்  சும்மா இருப்பீங்களா? என எல்லை மீறி அசிங்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

இதனால் கொதிப்பதிடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை விளாசிக்கொண்டிருக்கிறார்கள். சில விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி வீடியோ வெளியிட்டனர். அதை எல்லாம் பார்த்தும் திருந்தாத மீரா மிதுன், இது தான் விஜய் ரசிகர்களின் லட்சணம் என அதையும் தனது ட்விட்டர் பக்கத்திலேயே பதிவிட்டு வருகிறார். இதற்கு முன்னதாகவே மீரா மிதுனின் ஆபாச பேச்சை பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி,  விஜய்யின் நண்பர் சஞ்சீவ் ஆகியோர் சோசியல் மீடியாவில் கண்டித்துள்ளனர். 

 

இதையும் படிங்க: காரில் இருந்து இறங்கி அழுது கொண்டே ஓடிய எமி ஜாக்சன்... காரணம் என்ன தெரியுமா?

இந்நிலையில் விஜய்யின் தம்பியான விக்ராந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்க்கை மிகவும் ஷார்ட். நெகட்டிவிட்டி, கிசுகிசுவை கண்டு கொள்ள வேண்டாம். போலியான ஆட்கள், அவர்களின் டிராமாவை பெரிதாக எடுக்க வேண்டாம் என்று ட்வீட் செய்துள்ளார். ஆனால் இதற்கு கமெண்ட் செய்துள்ள விஜய் ரசிகர்களோ முதலில் நாங்கள் மீரா மிதுனை கண்டுகொள்ள வேண்டாம் என்று தான் நினைத்தோம். ஆனால் அவர் இப்போது விஜய் அண்ணா, அண்ணியைப் பற்றி வரம்பு மீறி பேசிவருகிறார். அதனால் இனியும் சும்மா விடமுடியாது என கொதித்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.