தனது முதல் இந்திப் படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்காத நிலையில் மும்பைக்கு ரெகுலராக விசிட் அடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்ரீதேவியின் மகள் மற்றும் அவரது கணவருடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அமித் ஷா இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத ஒரு படத்தில் நாயகியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதமே தொடங்க உள்ள நிலையில், அடுத்தடுத்த இந்திப்பட வாய்ப்புகளுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் மும்பைக்கு ரெகுலராக விசிட் அடிப்பதாகவும், அங்கு செல்லும் அவர் பாலிவுட் கலாச்சாரத்திற்கு உகந்தபடி பல பார்ட்டிகளில் தாராளமாகக் கலந்துகொள்வதாகவும் செய்திகள் வெளியாகின.

இச்செய்திகளை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், அவரது கணவர் போனிகபூர் ஆகியோருடன் அவர் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு எடுத்துக்கொண்ட படங்கள் வலைதளங்களில் வலம் வருகின்றன.