Saani Kaayidham : இன்று அதிகாலை ஓடிடி-யில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் தற்போது யூடியூப்பில் லீக் ஆகி உள்ளது. ஒரு சீன் விடாமல் முழு படமும் HD தரத்தில் யூடியூபில் பதிவேற்றப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ராக்கி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான இப்படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய படம் சாணிக் காயிதம். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வன்முறை காட்சிகள் அதிகளவில் உள்ளதால் இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படம் இன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.

இந்நிலையில், இன்று அதிகாலை ஓடிடி-யில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் தற்போது யூடியூப்பில் லீக் ஆகி உள்ளது. ஒரு சீன் விடாமல் முழு படமும் HD தரத்தில் யூடியூபில் பதிவேற்றப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தியேட்டர்களில் வெளியாகும் படங்களைப் போல் ஓடிடி-யில் வெளியாகும் படங்களுக்கு பைரசி என்பது பெரும் சவாலாகத்தான் உள்ளது. வழக்கமாக புதியதாக ஏதேனும் படங்கள் வெளியானால் அதனை பைரசி தளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடுவர். ஆனால் தற்போது கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யூடியூபில் முழு படமும் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... Khatija Rahman : மகளின் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்த ஏ.ஆர்.ரகுமான் - வைரலாகும் புகைப்படங்கள்
