நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் ஒரு திரைப்படம் கூட வெளியாகாத நிலையில், இந்த வருடம், மூன்று திரைப்படங்களுக்கு மிகாமல் வெளியாகும் என தெரிகிறது.

அந்த வகையில் தற்போது, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ் இந்தியா' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'மிஸ் இந்தியா' திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது. 

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 20 ஆவது படமாக நடித்திருக்கும் இந்த படத்தை, நரேந்திரநாத் என்பவர் இயக்கியுள்ளார். ஈஸ்ட் கோஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாக உள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

அதேபோல் அமெரிக்காவில் 5 ஆம் தேதி அன்று பிரீமியர் காட்சி வெளியிடப்படும் என்பதையும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த 'மகாநடி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி இவருக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்த நிலையில், 'மிஸ் இந்தியா' படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.