நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சாவித்தியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'மகாநடி'. இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் மிக கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்தவகையில், திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில வருடங்களிலேயே இவர் நடிகை நயன்தாராவை ஃபாலோ பண்ண துவங்கிவிட்டார் என்பது, இவர் தேர்வு செய்யும் படங்கள் மூலம் தெரிகிறது.

தற்போது தெலுங்கில் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் பாலிவுட்டில் பிரபல நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக ஒரு படத்திலும், தமிழில் சூப்பர்ஸ்டாரின் 'பேட்ட' படத்தை இயக்கிய, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில், கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார். 

இந்த படத்தை ஈஸ்வரன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான 'மேயாத மான்', 'மெர்குரி', ஆகிய படங்களின் வரிசையில் இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்துடன் வேற லெவலில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.