பாலிவுட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட கீர்த்தி சுரேஷ் – பிரபல நடிகையின் கணவர் தான் தயாரிப்பாளர்!

குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். பின், 2015-ஆம் ஆண்டு ரிலீஸான ‘இது என்ன மாயம்’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து தமிழிலும் கால் பதித்தார்.

இதனைத் தொடர்ந்து ‘விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால்’ போன்ற பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளம் மற்றும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் மோகன் லாலின் ‘மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், புதிய ஹிந்தி படமொன்றில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை ‘பதாய் ஹோ’ புகழ் அமித் ஷர்மா இயக்கவுள்ளாராம். இதனை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது ‘Bayview Projects LLP’ நிறுவனம் மூலம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.