keerthi suresh thelugu movie flop
கீர்த்தி சுரேஷ்:
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில், மற்ற கதாநாயகிகள் பொறமைப்படும் அளவிற்கு அடுக்கடுக்காக பல முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். பல இளம் நடிகைகள் கீர்த்தி என்ன மேஜிக் செய்தார் என தெரியாமல் புலம்பி வருகின்றனர். காரணம், இவர் ஏற்கனவே விஜயுடன் நடித்த 'பைரவா' திரைப்படம் கலவைய்யான விமர்சனங்களைப் பெற்று பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் மீண்டும் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும் விஷால், விக்ரம், உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கலந்த கனவு:
ஏற்கனவே மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் நிலையான இடத்தை பிடித்து விட்ட இவர், நடிகை சமந்தா திருமணம் செய்துக்கொண்டு போய் விட்டதால் ஆந்திராவிலும் முன்னணி இடத்தை பிடித்து விடலாம் என கணக்கு போட்டுக்கொண்டிருந்த கீர்த்தி தலையில் இடி விழுந்தது போல் ஆகியுள்ளது.
பவன் கல்யாண் படம் தோல்வி:
இவர் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணுடன் இணைந்து நடித்த படம் படுதோல்வி அடைந்துள்ளது.

நல்ல படம், மிக பெரிய சம்பளம் இந்த படத்திற்காக கீர்த்தி பெற்றிருந்தாலும் படம் படுதோல்வி அடைந்ததால் ஆந்திராவில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என இவர் கண்ட கனவு ஒரேஅடியாக கலைந்து போய் விட்டது.
