keerthi suresh support vijaythevarakonda
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் மிகவும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரிடம் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது என பல நடிகைகள் சிறு பொறாமையில் உள்ளனர் என்றும் கூறலாம்.
விரைவில் இவர் நடிப்பில், தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகியுள்ள சாவித்திரியின் வாழ்கை வரலாறு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில், ஜெமினி கணேசன் கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மானும், முக்கிய கதாப்பாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளார். 
மேலும் சிறப்பு தோற்றத்தில், அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தோவரகொண்டா, மற்றும் நடிகை ஷாலினி பாண்டேவும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சாவித்திரி வாழ்கை வரலாறு படத்தில் நடித்து வரும், கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை விஜய் வெளியிட்டு 'what a cool chick' என விமர்சித்திருந்தார். இது மிகவும் சர்ச்சையாக பேசப்பட்டது.
தற்போது இது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள கீர்த்தி சுரேஷ்... விஜய் சொன்ன வார்த்தையில், எதுவும் தவறு இருப்பதாக தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார். பலர் கீர்த்திக்கு சப்போர்ட் செய்து, விஜயை விமர்சித்த நிலையில் இவர் இப்படி ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார்.
