நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கிடைக்கும் லட்டு போன்ற வாய்ப்புகளை பார்த்து, முன்னணி நடிகைகளுக்கே பொறாமை வந்து விடும் போல, அந்த அளவிற்கு இவருடைய காட்டில் பட மழை பிச்சு கிட்டு கொட்டுது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை, கோலிவுட் திரையுலகை சேர்ந்த அனைவருக்குமே உண்டு. ஆனால் அது எப்போது நிறைவேறும் என்று யாருக்கும் தெரியாது.

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு, இந்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் விரைவாகவே அமைகிறது என்று தான் கூற வேண்டும். 

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ், தர்பார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவரின் '168 ' ஆவது படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல்கள் அரசால் புரசலாக வெளிவந்தாலும், இதுகுறித்து அதிகார பூர்வ தகவல் எதுவும் வெளியாக வில்லை.

இந்நிலையில், தற்போது... கீர்த்தி சுரேஷ் தலைவர் 168 ஆவது படத்தில் நடிப்பதை ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இயக்குனர் சிவாவிற்கு தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.