ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருது பெற்று மிகவும் பிரபலமானவர் நடிகர் பாபி சிம்ஹா.

அவர் கீர்த்திசுரேஷுடன் ஜோடியாக நடித்துள்ள பாம்புசட்டை படம் டிசம்பர் இறுதியில் வெளிவரும் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு U சான்றிதழ் பெற்றுள்ளது, ஆனால் தணிக்கையாளர்கள் படத்தில் சில காட்சிகளை கட் செய்ய சொல்லியிருக்கிறார்கள்.

இதில் பாபி ஒரு காட்சியில் கீர்த்திசுரேஷ் முன்பு நிர்வாணமாக தோன்றுவது போல் காட்சி அமைக்க பட்டுள்ளதாம்.

இந்த காட்சி இப்படத்திற்கு மிக முக்கியமானதாக உள்ளதாம். ஆனால் அடிக்கடி இது போன்ற காட்சிகள் தொடர்புபடுத்தி இருப்பதால் சென்சார் குழு அவற்றை ரத்து செய்து மீண்டும் தங்களுக்கு அனுப்பபடி கூறியுள்ளார்களாம்.

இதனால் படக்குழு மிகவும் யோசித்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, மேலும் சென்சார் செய்துவிட்டு மீண்டும் படத்தை மறுபரிசீலனை செய்ய அனுப்பாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் படம் சொன்ன தேதியில் வெளிவருமா என பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் ப்ரோமோஷனில் படம் விரைவில் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.