நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், தற்போது இவரின் புதிய லுக்குடன் கூடிய, அடுத்த பட ரிலீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு அதிக எண்னிக்கையில் படங்கள் நடித்த கீர்த்தி நடிப்பில், 2019 ஆம் ஆண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை. மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: பெயரை மாற்றிய இளையராஜா மகள் 

அந்த வகையில், தெலுங்கு, தமிழ் உற்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில், Marakkar Arabikadalinte Simham என்கிற படத்தில் நடித்து வருகிறார். மோகன்லால் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தின், போஸ்டருடன் கூடிய நியூ லுக் ஒன்றை வெளியிட்டு, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி இப்படம் இந்த ஆண்டு, மார்ச் மாதம் 26 ஆம் தேதி, ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: 67 வயது நடிகர் படத்தில்... 2 பேருடன் படுக்கை அறை காட்சியில் சோனா