பிரபல நடிகரும், இயக்குனருமான, பிரதாப் போத்தன் கதாநாயகனாக  நடித்துள்ள மலையாள திரைப்படம் 'பச்ச மாங்கா'.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சோனா நடித்துள்ளார்.

குடும்ப உறவுகள், ஆக்ஷன், செண்டிமெண்ட், கவர்ச்சி என அனைத்தும் கலந்த கலவையாக இப்படம் உருவாகியுள்ளது. மேலும் எல்லை மீறிய கவர்ச்சியில் ஒன்றிக்கும் மேற்பட்டவர்களுடன், படுக்கை அறை காட்சியில் சோனா நடித்துள்ளது தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் மூலம் தெரிகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் ரசிகர்களுக்கே அதிர்ச்சிகொடுத்துள்ளது.

இந்தப்படத்தை மலையான இயக்குனர் ஜெயேஷ் மைனாகபாலி இயக்குள்ளார். ஃபுல் மார்க் சினிமா இந்த படத்தை தயாரித்துள்ளது. குடும்ப கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

வைரலாகும் இந்த படத்தின் ட்ரைலர் இதோ...