லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு அடுத்து, திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தான். பல இளம் நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்களும் இவரை தங்களுடைய படத்தில் கமிட் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் காட்டில் தற்போது அடை மழை பொழிந்து வருகிறது.

இவர் நடிப்பில் வெளியான 'மகாநதி' படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் சாதனை செய்தது. இந்த  படத்திற்கு பிறகு மலையாளத்தில் 'மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் ஹிந்தியில் கால்பந்தாட்ட பயிற்சியாளரின் சுயசரிதை கதையிலும், மற்றொரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேந்திரா இயக்குகிறார். மார்ச் மாதம் இறுதியில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்காக 7 ஏக்கரில் பிரத்தேயகமாக செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். கடந்த 2 மாதங்களாக இந்த பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நடிகை நயன்தாரா பல படங்களில் கதையின் நாயகியாக நடித்த போதிலும் அவருக்கு கூட 7  ஏக்கரில், இது போல் செட் அமைக்கவில்லை. ஏன்? மற்ற எந்த நடிகையின் படத்திற்கும், இதுபோல் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தவில்லை என வாய் பிளக்கின்றனர் கீர்த்தி சுரேஷின் அபார வளர்ச்சியை பார்த்து.