keerthi suresh leeked vijay 62 important news
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள விஜய் 62 படத்தின் போட்டோ ஷூட் அண்மையில் சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோஸில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக சமூக வலைதளத்தில் பரவியது.
இந்நிலையில் மலேசியாவில் இன்று ஆரம்பமாக உள்ள கலை விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால் நடிகர் விஜய் ஒரு சில காரணங்களால் இந்த விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்று அப்சட்டில் உள்ளனர்.

அஜித் இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் கலந்துகொள்ள மாட்டார் என கூறப்படுகிறது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் இது தலயின் கெத்து என இதையும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த விஜய் 62 படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் இந்தப் படம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விஜய் 62 படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயின் என்று உறுதியானது எனக்கு மிகவும் சந்தோஷம், இப்படத்தில் என்னுடைய ரோல் பைரவா படத்தை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும். மேலும் இந்தப் படத்தில் பல்லவி சிங் என்பவர் எனக்கு காஸ்டியூம் டிசைனராக உள்ளார் என தெரிவித்துள்ளார்.
