நடிகை கீர்த்தி சுரேஷ் தான் பெஸ்ட்... என்று சொல்லும் அளவிற்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் குறுகிய காலத்திலேய நிலையான இடத்தை பிடித்துள்ளார் இவர். 

இதனால் தங்களுடைய படத்தில் இவரை புக் செய்ய வேண்டும் என்று பலர் போட்டி போட்டு வருகிறார்கள். 

கீர்த்தியும் தொடர்ந்து வரும் பட வாய்ப்புகளுக்கு, எதுவும் சொல்லாமல். கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது, 'சண்டைகோழி 2', 'சாமி 2' , 'சர்கார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் 'மகாநடி' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் மிகப்பெரும் மார்க்கெட்டை பிடித்துவிட்டார்.

இதனால் தெலுங்கிலும் தற்போது கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். ராஜமௌலியின் அடுத்தப்படத்தில் கூட இவர் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பிரபல ஆங்கில இதழின் அட்டைப்படத்திற்கு செம ஹாட் போஸ் ஒன்று கொடுத்துள்ளார், அதை சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.

அந்த புகைப்படம் இதோ...