keerthi suresh give the gold coins
தமிழில் அறிமுகம்
மலையாளத்தில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ், கீதாஞ்சலி என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியானெட் விருதை வாங்கினார். அதன்பிறகு தமிழில் விக்ரம் பிரபு நடித்த ”இது என்ன மாயம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் குவியத்தொடங்கின.

முன்னணி நடிகை
அதன்பிறகு ”ரஜினி முருகன்”, ”தொடரி”, ”பைரவா”, ”ரெமோ”, ”தானா சேர்ந்த கூட்டம்” என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களோடு நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் சாமி2, சண்டக்கோழி2 , நடிகையர் திலகம் என பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

தெலுங்கிலும் முன்னணி
அண்மையில் இவர் தெலுங்கில் நடித்த ”நேனு ஷைலஜா” படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பவன் கல்யாணுடன் நடித்த ”அஞ்சாதவாசி” படமும் தமிழில் சூர்யாவுடன் நடித்த ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் தெலுங்கு பதிப்பான ”கேங்” படமும் நல்ல ஹிட் ஆனதால், தெலுங்கு ரசிகர்களிடையே கீர்த்திக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. இது தமிழில் ”நடிகையர் திலகம்” என்ற பெயரில் தெலுங்கில் ”மகாநடி” என்ற பெயரில் உருவாகி வருகிறது. தற்போது தெலுங்கில் மகாநடி ஹிட் ஆனால் தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்க்கிறார் கீர்த்தி.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு
சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகத்தை, தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்வப்ன சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், சாவித்திரியின் கணவராக ஜெமினி கணேசன் வேடத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். பத்திரிக்கையாளராக சமந்தாவும், அவருக்கு ஜோடியாக தெலுங்கு அர்ஜுன் ரெட்டி புகழ், விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். விஜயா வாகினி அதிபர் சக்ரபாணியாக, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

தங்கக்காசுகள் பரிசு
மறைந்த நடிகை சாவித்திரி தன்னுடன் நடிப்பவர்களுக்கு தங்கக்காசுகளை பரிசாக கொடுப்பாராம். தற்போது அதுபோலவே நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து வரும் கீர்த்தி சாவித்திரியை போன்றே தன்னுடன் நடித்து வருவபவர்களுக்கு தங்கக் காசுகளை கொடுத்து வருகிறாராம். இதனால் கீர்த்தியிடம் தங்கக்காசுகளை பெற்றவர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வாழ்த்தியுள்ளனர்.
