நடிகை கீர்த்தி சுரேஷ், குறுகிய காலத்தில், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களிலும் நடித்து, வளர்ந்து வரும் நடிகைகளுக்கு செம்ம டப் கொடுத்து வருகிறார்.

இவர் அறிமுகமான முதல் படம் தோல்வி அடைந்தாலும், அதன் பின் வெளியான 'ரஜினி முருகன்' சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. பின் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர் படங்களை மட்டுமே டார்கெட் செய்து நடித்து, அடுத்தடுத்து தன்னுடைய வளர்ச்சியை நிரூபித்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு, மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில்நடித்தது, அவரை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றது. இந்த படத்திற்கு பின், முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை தவிர்த்து, நயன்தாரா பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

அந்த வகையில் தற்போது, பெண்குயின் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் திரையுலகிலும், கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியதும், உடல் எடையை கணிசமாக குறைத்து, ஆள் அடையாளமே தெரியாமல் மாறினார் கீர்த்தி சுரேஷ். மேலும் அவ்வப்போது, தன்னுடைய அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது புதிய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் கீர்த்தி...

நாளைய தினம் தீபம் கொண்டாட பட உள்ளதை குறிக்கும் விதத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கையில் தீபம் ஏந்தியவாறு, அழகில் கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்...

தீபம் ஏற்றி களைத்து விட்டதோ... சிலை போல் சேரில் அமர்ந்திருக்கும் கீர்த்தி...

என்ன ஒரு அழகு... தீபம் ஏற்றி கொண்டே, ரசிகர்களை பார்த்து பூரித்தபடி ஒரு புன்சிரிப்பு