Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம்... வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் விழிப்புணர்வு வீடியோ..!

ஏற்கனவே தமிழக அரசின் விழிப்புணர்வு வீடியோவில்,  நடிகர் சிவகார்த்திகேயன், சத்யராஜ், நடிகர் சிவகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து, இளம் நடிகையான கீர்த்தி சுரேஷ் இந்த வீடியோவில் கூறியுள்ளதாவது...
 
keerthi suresh corona awareness video viral in video
Author
Chennai, First Published May 25, 2021, 11:44 AM IST

கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த, தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும், கொரோனா தொற்றால் தினமும் தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 30 ,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவது மக்களை அச்சமடைய செய்துள்ளது. இந்நிலையில் பிரபலங்கள் பலர் கொரோனா குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தமிழக அரசின் விழிப்புணர்வு வீடியோவில்,  நடிகர் சிவகார்த்திகேயன், சத்யராஜ், நடிகர் சிவகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து, இளம் நடிகையான கீர்த்தி சுரேஷ் இந்த வீடியோவில் கூறியுள்ளதாவது...

keerthi suresh corona awareness video viral in video

"எல்லோருக்கும் வணக்கம், நான் கீர்த்தி சுரேஷ் பேசுகிறேன்.. கொரோனா தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நாமே, சின்ன சின்ன விதிமுறைகளை முழுமையாக ஃபாலோ செய்தால் போதும். தேவை இல்லாமல் வெளியே போகாதீங்க, அப்படியே போனாலும் மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள், அவசியமான இடங்களில் டபுள் மாஸ்க் போட்டு கொள்ளுங்கள். சமூக இடைவெளியை கடை பிடியுங்கள், கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

keerthi suresh corona awareness video viral in video

அரசு சொல்கிற அனைத்து விதிமுறைகளையும் கடைபிடியுங்கள். நான் என்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டேன். நீங்கள் எடுத்து கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக எடுத்து கொள்ளுங்கள். இதை தான் தமிழ் நாடு அரசும், சுகாதாரத்துறையும் வலியுறுத்துகிறது. இதை ஃபாலோ பண்ணி, நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளவேண்டியது நம்முடைய கடமை. கொரோனவை வெல்வோம்... கொரோனாவே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம் . நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என அந்த விழிப்புணர்வு வீடியோவில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios