நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கிடைக்கும் பட வாய்ப்பை பார்த்து பல இளம் நடிகைகள் பொறாமை பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு  கொண்டிருந்தாலும், அதையெல்லாம் சற்றும் காதில் வாங்கி கொள்ளாமல், கிடைக்கும் படங்களில் எப்படி, சிறப்பாக நடிப்பது என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு நடித்து வருகிறார் கீர்த்தி.

மேலும் எந்த கிசு கிசுவிலும், அதிகம் சிக்காமல் எஸ்கேப் ஆகிவிடுவது இவருடைய ப்லஸ்சாகவே பார்க்கப்படுகிறது.

இவர் நடிப்பில் கடந்த வருடம் மட்டும், தமிழில் 'தானா சேர்ந்த கூட்டம்', 'சண்டக்கோழி 2', 'சாமி 2 ', 'மகாநதி', மற்றும் 'சர்கார்' ஆகிய படங்கள் வெளியானது. இதில் இரண்டு படங்கள் மட்டுமே வெற்றி பெற்றாலும், மகாநதி படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து வியர்ந்து தற்போது பாலிவுட் பட வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை தட்டியுள்ளது.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், 'பதாய் ஹோ' படத்தின் இயக்குநர் அமித் சர்மா இயக்கத்தில், போனிக் கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்துக்கான பெயர், நடிகர் - நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 'மகாநதி' படத்திற்கு பின் தற்போது தன்னுடைய சம்பளத்தை கோடியில் உயர்ந்துள்ள இவருக்கு, பாலிவுட் பட வாய்ப்பு வேற கிடைத்து விட்டதால், வேற லெவலில் சம்பளம் கேட்பார் என இவரை கமிட் செய்ய காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் இயக்குனர்கள் சற்று கலக்கத்தோடு தான் உள்ளதாக கூறப்படுகிறது .