தமிழ் சினிமாவில், மிகவும் பிஸியாகவும், சத்தமில்லாமல் சைலண்டாக ஹிட் படத்தை கொடுத்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் வெளியான அசுரன், பொங்கல் விருந்தாக வெளியான பட்டாஸ் என இவரின் வெற்றிப்படங்களில் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

தற்போது இயக்குனர் மாரிச்செல்வன் இயக்கத்தில், 'கர்ணன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த, 'நெற்றிக்கண்' படத்தின் ரீமேக்கில் நடிக்க  உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ப்ரீ - புரோடக்ஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறதாம். நெற்றி கண் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா நடித்திருந்தார்.

எனவே நெற்றிக்கண் ரீமேக்கில், கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக நடிக்க வைக்க தனுஷ் பலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதற்கு முன் இயக்குனர் பிரபுசாலமோன் இயக்கத்தில் கடந்த 2016 ஆண்டு வெளியான தொடரி படத்தில் தனுஷ் - கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருந்தாலும், திரைப்படம் ஆரம்பமாகும் போது... யார் ஹீரோயின் என்பது தெரியவந்துவிடும், அது வரை காத்திருப்போம்.