‘காமெடி ப்ளஸ் த்ரில்லர் வகை படம்தான் இருட்டு. பொதுவாக பேய் படம், அல்லது பேய் பங்களாவை சுற்றி வரும் படம் என்றால், ஒரு குடும்பமோ, ஒரு காதல் ஜோடியோ அந்த பங்களாவுக்கு போகும். அங்கேயிருக்கிற எலிமென்ட் ஒண்ணு அவங்களை பாடாய் படுத்தும். அவங்க எப்படி தப்பிக்கிறாங்க என்பது கதையா இருக்கும். அரண்மனை அதிலேர்ந்து எப்படி வித்தியாசப்பட்டிருக்கு என்பதை டிசம்பர் 6ம் தேதி ரிலீஸன்று தெரிந்து கொள்ளலாம். 

“நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்னொரு இயக்குனர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளேன். நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விஷயங்கள் இருக்கும். முழுக்க பயப்படுகிற மாதிரி ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். துரை திறமையான இயக்குனர். இருட்டு படத்தை சிறப்பாக எடுத்துள்ளார்.

இந்தப்படம் புதுமாதிரியான பேய் படமாக இருக்கும். நானே பார்த்து மிரண்டு விட்டேன். ஒவ்வொரு காட்சியும் சீட் நுனிக்கு இழுக்கும். படத்தில் முத்த காட்சியும் நெருக்கமான காட்சிகளும் உள்ளன. கதைக்கு தேவை என்பதால் முத்த காட்சியில் நடித்தேன். படுக்கை அறை காட்சிகளை படமாக்கியபோது எனது மனைவி படப்பிடிப்புக்கு வந்து இருந்தார். அப்போது இயக்குனர் அதிக டேக்குகள் எடுத்து அந்த காட்சிகளை படமாக்கியது தர்ம சங்கடமாக இருந்தது”என சுந்தர்.சி கூறினார்.