அஜித்தை பற்றி பெருமையாக பேசாத நடிகர்களே கிடையாது, சினிமாவை பொறுத்தவரை தல அஜித் என்றாலே அனைவராலும்  மதிக்கப்பட கூடியவர். சாதாரண ரசிகனையும் தாண்டி நடிகர், நடிகைகள் கூட அஜித் என்றால் தனி மரியாதை கொடுப்பார்கள். அந்த அளவிற்கு அனைவரிடமும் மரியாதையுடன் பழகுபவர் அஜித், சினிமா வாழக்கையை விட, ஃ பர்சனல் லைஃபில் அனைவருக்கு எடுத்துக்காட்டாக வாழும் அஜித்தின் குணத்தை கண்டு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில்,  பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தல அஜித் மற்றும் அவரது ரசிகர்கள் குறித்து பேசியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இதில், தல அஜித்திடம் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் பாசத்தை நான் இது வரை வேறு எந்த நடிகரிடமும் கண்டதில்லை. அஜித் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர், அவருக்கு இருப்பது ரசிகர்கள் கூட்டம்  கிடையாது, அவர்கள் வெறியர்கள் என்று தான் சொல்லணும்.

ஒரு நடிகர் தொடர்ந்து ஹிட் அதிகமாக கொடுக்கவில்லை என்றால், அவரது ரசிகர்களின் கோபப்படுவார்கள் அல்லது பின்வாங்கிவிடுவார்கள். ஆனால், அஜித் என்ன செய்தாலும், அவரது ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அஜித் குறித்தும் அவரது ரசிகர்கள் குறித்தும் பெருமையாக பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

வாழ்றது முக்கியம் இல்ல, வாழும் போது தன்னோட ரசிகனுக்கு எடுத்துக்காட்டாக வாழனும், அப்படி ஒரு வாழ்க்கையை வாழும் அஜித்தையும், அவர் மீது அளவு கடந்த பாதிப்பும், மரியாதையும் வைத்து அவரின் வாழ்க்கையை பின்பற்றி வாழும் ரசிகர்களையும் சினிமா நட்சத்திரங்களே புகழ்ந்து வருகின்றனர்.