kayal chandran cheeting 5 crores

கயல் சந்திரன் அறிமுகம்:

'கயல்' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சந்திரன். இந்த படத்தை தொடர்ந்து 'ரூபாய்' படத்தில் நடித்தார். ஆனால் ரசிகர்களிடம் இந்த படத்திற்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை தொடர்ந்து, தற்போது 'கிரகணம்', 'திட்டம்போட்டு திருடுற கூட்டம்', 'பார்ட்டி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது தி.நகரைச் சேர்ந்த பிரபு வெங்கடாசலம் என்கிற தயாரிப்பாளர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 5 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்துள்ளார்.

பண மோசடி புகார்:

இது குறித்து அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது... 

நான் இதுவரை இரண்டு படங்களை தயாரித்துள்ளேன், கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன் மற்றும் ரகுநந்தன் ஆகியோர் என்னை சந்தித்து 'திட்டம்போட்டு திருடுற கூட்டம்' என்கிற படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் அதில் என்னையும் பங்கேற்கும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு நான் ஒப்புக்கொண்டு 5 கோடி பணம் கொடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆனேன். '2 மூவி பப்ஸ், அக்ராஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனங்களை தொடங்கி அந்த படத்தை தயாரித்தோம்.

ஆனால் தற்போது என்னை அந்த படத்தின் தயாரிப்பாளர் என்கிற தகுதியில் இருந்து நீக்கி விட்டனர். கடந்த ஒரு வருடமாக நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். தற்போது படத்தை வெளியிட இருகிக்றார்கள். எனவே இது தொடர்பாக கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.

அஞ்சனா தலையில் இடி:

மேலும் நடிகர் 'கயல்' சந்திரன் மனைவி, தொகுப்பாளினி அஞ்சனா கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தொலைகாட்சியில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்துக் கொள்ள உள்ளதாக தெரிவித்தார். ஆனால் திடீர் என இப்படி ஒரு பிரச்சனை வந்துள்ளது அஞ்சனா தலையில் இடி விழுந்தது போல் ஆகியுள்ளது.