இன்றைய தினம் கவின் பிக்பாஸ் மேடைக்கு வந்து என்ன பேசுவார் என மக்கள் அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். அனைவருமே எதிர்பார்த்தது போல், இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின், அகம் டிவி வழியே தற்போது வீட்டில் உள்ள 5 போட்டியாளர்களிடமும் பேசினார்.

ஏற்கனவே வெளியான ப்ரோமோவில், நான் வெளியே வந்ததால் நீங்க எந்த அளவிற்கு உடைந்து போவீர்கள் என்பது தெரியும் என லாஸ்லியாவை பார்த்து கூறினார் கவின். உடனே பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் கமல், சாரி பார் தி இண்டரப்ஷன் என கூறி, வாங்கனு சொல்றீங்க, வாடான்னு சொல்றீங்க, வா போ சொல்றீங்க என கேட்கிறார்.

இதற்கு கவின், அவங்க வீட்டுலையும் இதை பார்த்து கொண்டிருப்பார்கள் என கூறியதும், கமலே ஒரு நிமிடம் பீல் பண்ண துவங்கி விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். குறிப்பாக இதற்கு அவர் கொடுக்கும் ரியாக்ஷன் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டது.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோ ஒன்றில், லாஸ்லியாவிடம் பேசும் கவின், நல்ல படியா விளையாடுங்க. வெளியில ஐ அம் வைட்டிங் என கூறுகிறார். இதை கேட்டு லாஸ்லியாவின் வேகத்தோடு ஓகே என கூறுகிறார். பின் பக்கத்தில் நிற்கும் கமலை பார்த்து கவின் பயந்தவாறு பார்க்க, கமல் நான் என்ன அப்பாவா என நறுக்கென கேள்வி கேட்டு அனைவரையுமே சிரிக்க வைத்து விட்டார். 

இந்த காட்சியின் போது, கமலின் புன்னகை மன்னன் பாடலின் மியூசிக் ஒளிபரப்ப படுவது ஹைலைட் என்றே கூறலாம்.

அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்...