'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம், நடிகராக அறிமுகமானவர் கவின். இந்த சீரியலை தொடந்து இவர் நடித்த, சரவணன் மீனாட்சி சீரியல் இவரை. மேலும் பிரபலமாக்கியது. இவரது நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை ரசிகர்களுக்கு தெரியபடுத்தியது.

தற்போது, இவர் நடிகை ரம்யா நம்பீசனுக்கு ஜோடியாக 'நட்புனா என்னனு தெரியுமா' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் கவின். முதலில் சாக்ஷியை காதலிப்பது போல் பேசிவிட்டு, தற்போது அவர் வெளியேறி விட்டதால், சுதந்திர காதல் பறவைகளாக பிக்பாஸ் வீட்டை வட்டமடித்து வருகிறார்கள் லாஸ்லியா மற்றும் கவின்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிடைத்த இந்த அறிய வாய்ப்பை, தங்களை யார் என்று நிரூபித்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திசை திரும்பிவிடாதீர்கள் என, உலக நாயகன் கமலஹாசன் ஒவ்வொரு, வாரமும் இவர்களுக்கு சூசமாக நினைவு படுத்தியபோதும், இதனை அவர்கள் சற்றும் கண்டு கொள்ளவே இல்லை.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கவின் தன்னுடைய முன்னாள் காதலி பற்றி, லாஸ்லியாவிடம் முதல் முறையாக கூறுகிறார். மூன்று வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள், பின் ஒரு சில காரணங்களால் பிரிந்து விட்டதாக கூறகிறார். அந்த பெண் யார் என்பது தற்போது நெட்டிசன்கள் புதிய, கேள்வியாக இருக்கிறது.