தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவதாக வெளியாகி உள்ள ப்ரோமோவில் போட்டியாளர் கவின் வெளியேற தயாராகும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இது பார்க்கும் ரசிகர்களுக்கே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

அதாவது தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவர் மத்தியிலும்... 5 லட்ச ரூபாய்யை வைத்து, இந்த போட்டியில் ஒருவர் மற்றுமே வெற்றி பெற்று 50 லட்சத்தை எடுத்து செல்ல முடியும். 

எனவே இப்போது இந்த போட்டியில் இருந்து விலக நினைப்பவர்கள் இந்த 5 லட்ச ரூபாய்யை எடுத்து கொண்டு செல்லலாம் என கூறுகிறார் பிக்பாஸ். இதை கேட்டு மற்ற போட்டியாளர்கள் மிகவும் அமைதியாக இருக்கும் நிலையில், கவின் மட்டும் எழுந்து நிற்கிறார். இதை பார்த்து சாண்டி மாற்றும் மற்ற போட்டியாளர்கள் அவரை என்ன பண்ற என கேள்வி எழுப்பும் காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த சீசனில் இதே போல், நடிகை ஐஸ்வர்யா தத்தா 5 லட்ச ரூபாய்யை எடுத்து கொண்டு வெளியே செல்ல முயன்ற போது, இந்த தொகை ஐஸ்வர்யா எடுத்து சென்றால், வெற்றி பெறுபவருக்கு 45 லட்சம் மட்டுமே பரிசாக கொடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அந்த முயற்சியை கை விட்டு விட்டு, நிகழ்ச்சியில் கவனம் செலுத்த துவங்கினார்.

இதனால், இதே போல் ஏதேனும்... இன்றைய தினம் ட்விஸ்ட் இருக்குமா, அல்லது கவின் வெளியேறுவாரா என இன்றைய நிகழ்ச்சி உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ப்ரோமோ இதோ...