கவினுக்கு தான் "முதலிடம்"...! கடைசி நேரத்தில் எல்லாம் போச்சே... கலங்கும் ஆதரவாளர்கள்..!  

ரூபாய் 5 லட்சம் பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த வீடியோ இன்று ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் கவின் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல் கிடைக்கப்பெற்று உள்ளன. தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.தற்போது பிக் பாஸ் சீசன் 3 நிறைவு பெறும் தருவாயில் யார் இந்த நிகழ்வில் "டைட்டில் வின்னர்" பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதனுடன் இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது. 

இந்த நிலையில் பிக்பாஸ் கொடுத்த ஆப்ஷன் ரூபாய் 5 லட்சம் பெற்றுக்கொண்டு உங்களில் யாராவது ஒருவர் வெளியேற விரும்பினால் செல்லலாம் என தெரிவித்து உள்ளனர். இதற்கு முதல் ஆளாய் முந்திக்கொண்டு கவின் வெளியேறுகிறார். ஆனால் ஒருவேளை கவின் வெளியேறாமல் இருந்திருந்தால் அவர் தான் பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் பெற்று இருப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

காரணம்... பிக் பாஸ் சீசன் 1 மற்றும் பிக் பாஸ் சீசன் 2 ஆகய நிகழ்வுகளில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்ட கவின் தான் இதற்கு முன்னதாக யாரும் வாங்காத அளவிற்கு ஓட்டு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வளவு ஏன் பிக் பாஸ் சீசன் 1 இல்,  நடிகை ஓவியாவிற்கு பெரும் ஆதரவு கிளம்பியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் பெரும் புரட்சியை சமூக வலைத் தளத்தில் காணமுடிந்தது. இவை அனைத்தையும் கடந்து பிக் பாஸ் சீசன் 3 இல் கவின் அதிக வாக்குகள் பெற்று இருந்தாராம். இந்த விஷயம் பிக்பாஸ் வீட்டில் இருந்த கவினுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால், இடையே அறிவித்த ஒரு ஆப்ஷன் "5 லட்சம்" பெற்றுக்கொண்டு வெளியேறலாம் என்பதை கேட்டவுடன் இதற்கு ஒப்புதல் அளித்து வெளியேறி உள்ளார் கவின். ஒருவேளை வெளியேறாவிட்டால் "பிக்பாஸ் டைட்டல்" வின்னர் பெற்று இருப்பார்.ஆனால் வெளியேறியதால் அடுத்த வாய்ப்பு தக்ஷன் அல்லது சாண்டி மாஸ்டர் அல்லது முகேனுக்கு உள்ளது என கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.