100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமையுடன் முடிவடைய உள்ளது. பிக்பாஸ் பைனலுக்கு சாண்டி, லாஸ்லியா, முகேன், மற்றும் ஷெரின் ஆகியோர் செல்ல உள்ளனர். ஆனால் இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டல் வெல்வார் என்பது யூகிக்க முடியாமல் உள்ளது.

ஒரு தரப்பினர் சாண்டி தான் வெற்றி பெறுவார் என கூறினாலும், கவினுக்கு உள்ள ஆதரவு தற்போது லாஸ்லியாவின் பக்கம் திரும்பியுள்ளது. அதனால் லாஸ்லியா வெற்றி பெறவும் வாய்ப்புகள் உள்ளதாக மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள்.

மேலும் முகேன் டைட்டல் வின்னராக தேர்வு செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை தாண்டி விட்டதால், இந்த நால்வருக்கும் பிக் பாஸ் அவர்களிடம் உள்ள திறமையை வெளிப்படுத்தி, அதன் மூலம் மக்களின் வாக்குகளை பெறலாம் என கூறியுள்ளது.

அதே போல் நிகழ்ச்சி டல் அடித்து விட கூடாது என்பதற்காக, இந்த சீசனில் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்களை ஒன்று சேர்த்துள்ளனர் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.  அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள், பாத்திமா பாபு, கஸ்தூரி, சேரன், வனிதா, சாக்ஷி, ரேஷ்மா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

கவின் மற்றும் தர்ஷன் ஆகோயோர், கடந்த வாரம் தான் வெளியே சென்றதால் உள்ளே வரமாட்டார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீர் என, கவின் மற்றும் தர்ஷன் உள்ளே வந்தனர். இவர்கள் இருவரையும் பார்த்ததும் அனைவருமே ஆச்சர்ய அதிர்ச்சியில் உறைந்தனர். கவினை பார்த்ததும் சாண்டி அவரை தூக்கி கொண்டு பிக்பாஸ் வீடு முழுவதும் சுற்றினார். அதே போல், முகேன் தர்ஷனை தூக்கி கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

லாஸ்லியா, கவின் கையை பிடித்து கொண்டு உன்னை எவ்வளவு மிஸ் பண்ணுனேன் தெரியுமா என கூறுவதும், காதலோடு பார்வை பார்ப்பதும் இந்த ப்ரோமோவின் ஹை லைட் என்றே சொல்லலாம். தர்ஷன் சாப்பாடு பிரியர் என்பதால் அவருக்கு சாப்பாடு ஊட்டி விட்டு அலப்பறை செய்து விட்டனர் அங்கு இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்.

அந்த புரோமோ இதோ...