இயக்குனர் இலன் இயக்கும் 'ஸ்டார்' படத்தில் கவினுக்கு ஜோடியாக ஜிமிக்கி கேரக்டரின் நடிக்க உள்ள ஹீரோயின் குறித்த தகவலை தற்போது படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இலன். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்திருந்தார். ஜாலியான பொழுது போக்கு காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

பியார் பிரேமா காதல் படத்திற்கு பின்னர், மீண்டும் ஹரிஷ் கல்யாண் உடன் கூட்டணி வைக்க இயக்குனர் இலன் முடிவு செய்த நிலையில், 'ஸ்டார்' என்கிற படத்தில் அவரை வைத்து இயக்க முயற்சி செய்தார். முதலில் இந்த படத்தில் கமிட் ஆன ஹரீஷ் யார் பின்னர் ஒரு சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார். இவருக்கு பதில் தற்போது 'ஸ்டார்' படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நடிகை இனியாவா இது? புது தொழிலில் இறங்கியதும் இப்படி கொழுக்கு மொழுக்குன்னு மாறிட்டாங்களே! ரீசென்ட் போட்டோஸ்!

இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்கிற இரண்டு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இப்படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ஜிமிக்கி என்கிற கதாபாத்திரத்தில், நடிக்கும் ஹீரோயின் யார் என்பதை வீடியோ வெளியிட்டு ரிவீல் செய்துள்ளது.

அதன்படி ஜிமிக்கியாக நடிகை அதிதி போகன்கார் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பிரதீப் ராகவன் படத்தொகுப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Tv Bhavana : அழகிலும்.. ஸ்டைலிலும் ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா!STAR - Aaditi Pohankar as Jimikky | Kavin | Elan | Yuvan Shankar Raja | Lal, Aaditi Pohankar