பிக்பாஸில் தங்களது உண்மையான, நேர்மையான குணம், பிறரை காயப்படுத்தாத மனிதநேயம், ஆத்மார்த்தமான அன்பினால் காதலுக்கு மரியாதை செலுத்திய இந்த ஜோடி, போட்டியில் வெற்றிபெறாவிட்டாலும் ஒவ்வொரு ரசிகனின் குடும்பத்தில் ஒரு அங்கமாக அனைவரின் மனதிலும் இடம்பிடித்தது. இதனாலேயே, இருவருக்கும் கவின் ஆர்மி, லாஸ்லியா ஆர்மி என தனித்தனியாகவும், கவிலியா என சேர்ந்தும் பல ஆர்மிக்கள் உருவாகின.
 
கவின் - லாஸ்லியாவின் தூய்மையான அன்பைக் கண்டு தங்களை தொலைத்தவர்கள், இன்றளவும் இருவர் குறித்து ஏதேனும் செய்திகள் வராதா? என்ற எதிர்பார்ப்புடன் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். 

அப்படி, ஏதாவது செய்தியோ அல்லது இருவரின் புகைப்படங்களோ வெளியாகும்பட்சத்தில் அதனை ட்ரெண்டிங் செய்து கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதற்கு உதாரணம், தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள பிக்பாஸ் கொண்டாட்ட ப்ரமோக்களே. விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியான ப்ரமோக்களை கவிலியா ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். 

அதன் கமெண்ட் பாக்ஸ் முழுவதும் கவிலியா ரசிகர்களின் கொடியே பறக்கிறது. குறிப்பாக, கவின் ரசிகர்கள் ப்ரமோவில் வெற்றிமகனுக்கு அதிக முக்கியத்துவம் தர சொல்லி விஜய் டிவியை நச்சரித்து வருகின்றனர். 

அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களாக உருவாகியுள்ளனர் கவின் ஆர்மியினர். அப்படிப்பட்டவர்களுக்கு செம தீணியாக ஒரு அப்டேட் வந்தால் சும்மா விடுவார்களா என்ன?. தற்போது சோசியல் மீடியாவையே உற்சாகத்தில் அதகளப்படுத்தி வருகின்றனர். 

கவின் ஆர்மியின் இந்த மகிழ்ச்சிக்கு காரணம், 'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சன்தான். ஆம், கவின் பற்றிய அப்டேட்டோ? அல்லது புகைப்படமோ வெளியாகாதா என காத்திருந்த ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக, நெல்சன்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "யாருக்கு மெசேஜ் அனுப்புறான்னு தெரியலேயே" என்ற கேப்ஷனுடன் கவினின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம்தான், தற்போது சோசியல் மீடியாவையே அதிரவைத்து வருகிறது. இதைப் பார்த்த கவிலியா ரசிகர்கள், "வேறு யாருக்கு அனுப்புவாரு, லாஸ்லியாவுக்குதான்" என தங்களது மகிழ்ச்சியை கமெண்ட்களாக தெறிக்கவிட்டு வருகின்றனர். 

இந்த விஷயம் வைரலாவதை அடுத்து, நெல்சனின் பதிவுக்கு பதிலளித்துள்ள கவின், "நெட் பேக் முடிஞ்சி போச்சுன்னு ரீ-சார்ஜ் பண்ணிக்கிட்டிருந்தேண்ணா"என பதிவிட, அதற்கும் பதிலளித்துள்ள ரசிகர்கள், 'நாங்க நம்பிட்டோம்...' 'விடிய விடிய கடலைபோட்ட நெட் பேக் தீரமா என்ன பண்ணும்...' என்பது மாதிரியான கமெண்ட்களை அள்ளி வீசி கவினை திக்குமுக்காட செய்து வருகின்றனர். எதுஎப்படியோ, பிக்பாஸின் மூலம் மக்களின் மனதை வென்ற கவிலியா ஜோடி ரியல் லைஃபிலும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.