சினிமா தொழிலில் யாரும் 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்க முடியாது என பிரபல நடிகை கூறியிருப்பது, நடிகர், நடிகைகளிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்துறையில் நடிப்பு வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக பல்வேறு நடிகைகள் புகார் கூறிய நிலையில், தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஒருபடி மேலே போய், தன்னுடன் உடலுறவு கொண்டு, வாய்ப்பு தராமல் ஏமாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். நாளுக்கு நாள் அவர் வெளியிடும் பட்டியல் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், திரைப்படத் தொழிலுக்கு வந்துவிட்டால், பாதுகாப்பை எல்லாம் பார்க்கக் கூடாது என்ற தொணியில் பேசியிருக்கிறார் இந்தி நடிகை கத்ரினா கைஃப். ராஜ்நீதி, ஏக் தா டைகர், தூம்3, டைகர் ஜிந்தா ஹை உள்ளிட்ட படங்களின் மூலம் இந்தி திரைப்பட உலகில் புகழின் உச்சிக்கே சென்ற கத்ரினா கைஃப், திரைப்படத் தொழில் பயங்கரமாக மாறியிருப்பதாக கூறியுள்ளார்.”நான் ஒருபோதும், சினிமா உலகில் 100% பாதுகாப்பான இருப்பதாக உணரவில்லை. ஏனெனில் திரைப்படத் தொழிலில் வெகுவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. புதுப்புது ஐடியாக்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதற்கேற்றாற்போல், நாமும் மாறிக் கொள்ள வேண்டும். அதனால் தான் எனக்கு தற்போது வெற்றிகரமான வாழ்க்கை கிடைத்துள்ளது.

சினிமாவில் கடின உழைப்பை செலுத்துவதுடன், நடிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் நாம் தொடர்ந்து மதிக்கப்படுவோம். புதுப்புது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். நான் சில உண்மை கதைகளில் நடித்துள்ளேன். மனதில் தோன்றியவற்றை செய்துள்ளேன். அதோபோல் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும். நான் நடிக்கும் ஒரு படம் ஓடாவிட்டால், அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவே இதை பாதுகாப்பான வாழ்க்கை என கூறிவிட முடியாது. எனவே நான் திரைத்துறையை பாதுகாப்பான துறை என்று நினைக்கவில்லை. எனவே தான், புதுப்புது கதாபாத்திரங்களில் நடித்து, என்னை தக்க வைக்க முயற்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார் கத்ரினா கைஃப்.