திரையுலகினர் மத்தியிலிருந்து சற்றே மந்தமாகத்தான் கஜா புயல் நிவாரண உதவிகள் வந்துகொண்ட்ருக்கின்றன. இன்னும் விக்ரம், அஜீத்,விஜய்,சிம்பு போன்ற டாப் ஸ்டார்கள் உதவ முன்வராத நிலையில் ‘காற்றின் மொழி’ படத்தயாரிப்பாளர் தனஞ்செயனும் இயக்குநர் ராதாமோகனும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

கடந்த வாரம் ரிலீஸான ‘உத்தரவு மகாராஜா’, ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய இருபடங்களை விட ராதாமோகனின் ‘காற்றின்மொழி’ நல்ல வசூல் செய்துவருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக வசூலாகும் பணத்தில் ஒவ்வொரு டிக்கட்டும் இரண்டு ரூபாய் வீதம் தமிழகம் முழுவதும் வசூலாகும் பணம் கஜா புயலுக்கு நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும்  அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை மனதாரப் பாராட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.