பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் ஜூன் 23 ஆம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். ஆரம்பத்தில், சுமூகமாக போன இந்த போட்டியில் நாட்கள் ஆக ஆக சில பிரச்சனைகளும் வெடித்து வருகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரமான நேற்று, நாமினேஷன் படலமும் அமோகமாக ஆரம்பமாகியுள்ளது. இதில் சரவணன், சேரன், கவின், சாக்ஷி, பார்த்திமா பாபு, மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இதுவரை நல்லவங்க மாதிரி ஆக்ட் குடுத்தவாக நாமினேட் ஆன பிறகு நாசமாக போறாங்க என்கிற கருத்தை தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி. தற்போது போட்டியாளர்களிடம் சண்டை அதிகமாகி வருவதால், இவர் இப்படி ஒரு கருத்தை கூறியிருக்க வாய்ப்புள்ளது.

அந்த ட்விட் இதோ: