‘தல’ வெளியே தலைகாட்டுவதையே சுத்தமாக நிறுத்திவிட்டிருந்தாலும் அவரது சர்ச்சைகளுக்கு ஒரு நாளும் பஞ்சம் இருந்ததில்லை. லேட்டஸ்டாக அவரது ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் தமிழில் எத்தனை கெட்டவார்த்தைகள் உள்ளதோ அத்தனையிலும் அர்ர்சனை பெற்றுக்கொண்டு பதிலுக்கு குழாயடி சண்டைக்காரி மாதிரி கூவிக்கொண்டிருக்கிறார் பழைய்ய்ய நடிகை கஸ்தூரி.

வேறு வேலவெட்டி எதுவும் இல்லாததால் தனது பெரும்பாலான நேரத்தை வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற வலைதளங்களில் செலவழித்து வருகிறார் நடிகை கஸ்தூரி. யாராயாவது தினமும் வம்பிழுக்கவில்லையென்றால் அன்றைக்கு தூக்கம் வராது என்கிற அளவுக்கு அவருக்கு வியாதி முற்றியிருக்கும் நிலையில் கடந்த ஒருவாரகாலமாக அஜீத் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்.

செயற்கைக்கோள் பற்றி கஸ்தூரி வெளியிட்ட பதிவு ஒன்றிற்கு, சம்பந்தமே இல்லாமல் ரசிகர் ஒருவர் தரக்குறைவான வார்த்தைகளால் பதில் வெளியிட்டிருந்தார். கூடவே அதில் அவர் அஜித் பேரையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்த கஸ்தூரி, வழக்கம்போல சம்பந்தப்பட்ட அந்த நபரை பற்றி மட்டும் பேசாமல், ரசிகர் மன்றத்தையே மொத்தமாக வம்புக்கு இழுத்தார்.

 அந்தப்பதிவில்...
செவ்வாய் கிரகத்து செயற்கைகோள் பத்தி பதிவு போட்டா, அங்க வந்து கோத்தா கொம்மானு பேசுற கழிசடைகள். இதுங்கல்லாம் 'தல' பேரை இழுக்குதுங்கன்னு தெரிஞ்சுதான் ரசிகர் மன்றத்தை எப்போவோ கலைச்சுப்புட்டாரு. #தலமரியாதை #தலையெழுத்து. 
கண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா? என்று பதிவிட்டார் கஸ்தூரி.

இதன் பின்னர் தமிழ் மொழியில் எத்தனை கெட்டவார்த்தைகள் உண்டோ அத்தனையையும் தேடிப்பிடித்து திட்டிக்கொண்டிருக்கிறார்கள் ‘தல’ ரசிகர்கள்.