பிரபல நடிகை கஸ்தூரி சமீப காலமாக, அரசியல் சினிமா என அனைத்தை பற்றியும் தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகிறார். இவர் கூறிய சில கருத்துக்கள் சர்ச்சையாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் மற்றும் விவேக் ஓப்ராய் நடித்து வெளிவந்துள்ள 'விவேகம்' திரைப்படம் குறித்து ரசிகர் ஒருவர் கஸ்தூரியிடம் படம் பார்த்து விட்டீர்களா... இந்த படம் குறித்து உங்களுடைய கருத்தை கூறுங்கள் என ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு கஸ்தூரி பார்த்தேன் "முதல் நாள் முதல் ஷோ" என்று கூறி இந்த படம் குறித்து கருத்து கேட்டதற்கு "ஐயோ வாயை கிளறாதீங்க... நானே கம்முனு இருக்கேன்" என மிகவும் கோவமாக பதில் கூறியுள்ளார்.

ஏற்கனவே விவேகம் திரைப்படம் 'தமிழ் படம் போல் இல்லை'... 'படம் புரியவில்லை'... என கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நடிகை கஸ்தூரி இப்படி ஒரு பதில் கொடுத்திருப்பது அஜித் ரசிகர்களை கோவப்படுத்தியுள்ளது.