பிக்பாஸ் வீடு முன்பை விட வித்தியாசமான டாஸ்க் மற்றும் விளையாட்டுக்களால் கலை கட்டி வருகிறது. ஆனால் முன்பை விட பிரச்சனைகள் சற்று குறைவாகவே உள்ளது. இது சண்டை சச்சரவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றே கூறலாம். 

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், போட்டியாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, பிக்பாஸ் வீட்டில் சிவப்பு நிற பேப்பரால் சுற்றப்பட்ட, ஆள் உயர ஒரு கிப்ட் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அதில், சில கலர் பலூன்களும் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்த, ஹவுஸ் மேட்ஸ் மிகவும் உச்சாகத்தோடு அந்த பாக்ஸை பிரிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதன் உள்ளே இருந்து, நடிகை கஸ்தூரி வெளியே வருகிறார்.

குறிப்பாக, கடந்த சில வாரங்களாக வயல் கார்டு சுற்றுக்குள் நடிகை கஸ்தூரி நுழைய வாய்ப்பு உள்ளதாக, கிசுகிசுக்கப்பட்ட நிலையில், கஸ்தூரி "போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு.... அதே மாதிரி   கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு  சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க.  எவ்வளவுதான் மறுக்கமுடியும் ?  இதுக்கு விதம் விதமா 'ஆதாரம்' வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்." என பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் சீன் போட்டார்.

ஆனால், தற்போது திடீர் என இவர் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்திருப்பது, போட்டியாளர்களுக்கு மட்டும் இன்றி இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இந்த ப்ரோமோவில் எடுத்ததுமே சாக்ஷி உங்களிடம் தான் சில கேள்விகளை கேட்க வேண்டும் என கூறி கச்சேரியை வீட்டுக்கு வந்த 5  நிமிடத்திலேயே ஆரம்பிக்க துவங்கியுள்ளார்.