kashthuri talking about cinemalife
உலகில் உள்ள அனைவராலும் கவனிக்கப்படுவது சினிமா துறைதான், அதனால் சினிமாவில் தானும் ஒரு நச்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பலர் உண்டு.
சினிமாவில் தன்னுடைய திறமையை முதலில் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் தேவை, அப்படி வாய்ப்புகள் கொடுக்க ஒரு சிலர் பெண்களை தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஒருவேளை சினிமாவில் நடிக்க திறமையை மட்டுமே நம்பி வாய்ப்புகள் கொடுத்தால் அது அதிர்ஷ்டம் தான்.
இந்நிலையில் இது குறித்து பிரபல நாயகி கஸ்தூரி முதல் முறையாக மனம் திறந்துள்ளார்... அவர் கூறுகையில், பட வாய்ப்புகள் கொடுப்பதற்காக நாயகிகளை படுக்கைக்கு அழைக்கும் அவலம் சினிமாத்துறையில் அரங்கேறி வருவது உண்மை தான் என்று கூறியுள்ளார்.
மேலும் இதே போல் பல துறைகளில் பெண்கள் சில கொடுமைகளுக்கு ஆளாக படுகின்றனர். ஆனால் திரைத்துறையை பொறுத்தவரை அப்படிப்பட்ட கொடுமைகள் அதிகமாகவே நடைபெறுவதாக கூறப்படுகிறது என்றார்.
நடிப்பதற்கும் தன் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் வேண்டும் என்கிற ஒரு நோக்கத்திற்காக ஒரு சிலர் இதற்கு உடன்படுவதாக பகீர் தகவல்களை கூறியுள்ளார் கஸ்தூரி.
