பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்கிற அடையாளத்தோடு, தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்து, கருப்பன், பலே பாண்டியா, போன்ற படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தன்யா ரவிச்சந்திரன். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் நடிப்பில் வெளியான படங்கள் சுமாரான வெற்றியை பெற்ற போதும், மனதிற்கு பிடித்த கதையம்சம் கொண்ட படத்தில் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இவரின் இந்த பதில், உண்மையிலேயே ரசிகர்கள் அனைவரையும் அசரவைத்துள்ளது என்றே கூறலாம்.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், இந்த வருடம் இவர் சிபிராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள 'மாயோன்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர், நகைகள் அணிவது குறித்து பிரபல செய்தி இணையதளத்திற்கு கூறியுள்ள பதில், ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அதாவது அவருக்கு தங்கத்தால் ஆன நகைகள் அணிவதில் சற்றும் உடன்பாடு இல்லை என்றும், புன்னகை மட்டுமே மிகவும் பிடித்தது என கூறியுள்ளார்.