karunas wife admited the hospital
நடிகர் கருணாஸ் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் இவருடைய மனைவி கிரேஸ், திரையுலகத்தை சேர்ந்த பிரபல பின்னனி பாடகி, இவர் பாடிய கிறஸ்துவ பக்தி பாடல்கள், குத்து பாடல்கள் , மற்றும் கிராமியபாடல்கள் பிரபலமானவை.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த தமிழக அரசியல் பிரச்சனையில் கருணாஸ் சசிகலா தரப்பிற்கு ஆதரவளித்து வந்தார். இதை விரும்பாத பலர் சமூகவலைதளங்களிலும், போனிலும் அவரை விமர்சித்தனர்.
மேலும் சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும், தொகுதிக்கு வந்த அவரை கல், செருப்புகளை வீசியும் தாக்கினர். ஒரு சிலர் கிரேஸ்க்கு போன் போட்டு இது பற்றி விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையே நினைத்து நினைத்து அவரின் மனைவி கிரேஸ்க்கு அதிர்ச்சியால் நெஞ்சுவலி ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைஎடுத்துவருகிறாராம். ஒரு விதத்தில் இதற்கு முழு காரணம் கருணாஸ் என்றே கூறப்படுகிறது .
