நடிகர் கருணாஸ் என்பதை தாண்டி தற்போது ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ என்றே அவரை பலரும் பார்த்து வருகின்றனர் . இவர் மீது பலருக்கும் கோபம் ஏற்பட காரணம் சமீபத்தில் இவர் ஒரு தரப்பை ஆதரித்தது தான்.

ஆனால், மக்கள் யாருமே அந்த ஆதரவை விரும்பவில்லை, இதனால், இதன் காரணாமாக தொடர்ந்து அவரை சமூக வலைத்தளங்கள் போன்ற பல வற்றிலும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர் தொகுதிக்கு திரும்புகையில் இவர் சென்ற காரில் பொதுமக்கள் செருப்பை வீசி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த காரில் செருப்பு வீசியவர்கள் யார் என்று போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.