Asianet News TamilAsianet News Tamil

கதையின் நாயகனாக நடிக்கும் கருணாஸ்... ஜோடியான பிக்பாஸ் நடிகை! யார் தெரியுமா?

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'ஆதார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
 

karunas again acting hero subject movie pair to biggboss celebrity
Author
Chennai, First Published Jul 16, 2021, 10:40 AM IST

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'ஆதார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் கருணாஸ் அரசியலில் ஆர்வம் காட்டி வந்தாலும், தொடர்ந்து படங்களில் கதையின் நாயகனாகவும், காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்', ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி. எஸ். ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'பிக்பாஸ்' புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார். 

மேலும் செய்திகள்: அம்மா ஸ்ரீ தேவியை உரித்து வைத்திருக்கும் மகள்..! இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா..! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
 

karunas again acting hero subject movie pair to biggboss celebrity

இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், வத்திக்குச்சி படப்புகழ் திலீப், 'பாகுபலி' பட புகழ் பிரபாகர், நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா இசை அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை கவனிக்க, படத்தொகுப்பை ஜெய் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை ஜான் பிரிட்டோ ஏற்க, இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ஏ பி ரவி பணியாற்றுகிறார். 

மேலும் செய்திகள்: லைட் மேக்அப் ... சாதாரண சேலை... அழகில் அரச வைத்த 'பாரதி கண்ணம்மா' ரோஷ்னி..! ஸ்டன்னிங் போட்டோஸ்!
 

karunas again acting hero subject movie pair to biggboss celebrity
'ஆதார்' படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்  அழகம்மை மகன் சசிக்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதில் நாயகன் கருணாஸ், நாயகி ரித்விகா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படத்தின் பெயரே மிகவும் வித்தியாசமாக உள்ளதால், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios