தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நகைச்சுவை நடிகர் கருணாஸ் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தபோது கருணாஸ் சசிகலா அணிக்கு ஆதரவு அளித்தார்.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் அவருக்கு வாக்களித்தார். இந்நிலையில் தன்மீது சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், கண்ணீர் அஞ்சலி புகைப்படம் வாட்ஸ் அப்களில் பரவுகிறது ,மட்டும் சிலர் தனக்கு போன் செய்து தரைக்குறைவாக பேசி திட்டுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், 'திருவாடனை தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் தனக்கு ஓட்டு போட்ட 75000 பேர்கள் தவிர மீதிபேர் தன்னிடம் கேள்வி கேட்க உரிமையில்லை என்றும் கூறினார்.
மேலும் தான் எதையும் தைரியமாக பேசுபவன் என்றும் தன்னைப்பற்றிய அவதூறு பரப்புவதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருணாஸின் இந்த பேட்டி திருவாடனை தொகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
