தற்போது தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை மிக மோசமாக மாறியுள்ளது. காரணம் தமிழ்நாட்டை பாதுகாக்கும் பொறுப்பான முதலமைச்சர் என்கிற இடத்தை அடுத்து யார் பிடிப்பார்கள் என ஓட்டு போட்ட மக்களே குழப்பத்தில் உள்ளனர்.

இதைப்பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த இந்தியாவே பேசிக்கொண்டிருக்கிறது. நடிகர் கமலஹாசனின் தொடங்கி பல முன்னணி நடிகர்கள் இது பற்றி தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் தற்போது முன்னனி ஹீரோக்கள் படத்தில் காமெடியன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவு அனைவரையும் சிரிக்கவைத்துவிட்டது.

அவர் கூறியுள்ளது இந்த ஓபிஎஸ் -சசிகலா பிரச்சனையால் தமிழக பொறுப்பு கவர்னர் ராஜினாமா செய்யாமல் இருந்தால் சரி என அவர் கூறியுள்ளார்.