Viruman: பருத்தி வீரன் ஸ்டைலில் ரிலீசானது விருமன் பட கஞ்சா பூ கண்ணாலே பாடல்...மனதை கொள்ளை கொள்ளும் யுவனின் இசை
Viruman movie Kanja Poovu Kannala song: நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு யுவன் சங்கர் ராஜா இசையில் விருமன் திரைப்படத்தின் 'கஞ்சா பூ கண்ணாலே'என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு யுவன் சங்கர் ராஜா இசையில் விருமன் திரைப்படத்தின் 'கஞ்சா பூ கண்ணாலே'என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.
விருமன்:
நடிகர் கார்த்தி, கொம்பன் பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில், விருமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில், கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். அதிதி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
நட்சத்திர பட்டாளங்கள்:
இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதைக்களம்:
கிராமத்து கதை அம்சம் கொண்ட இப்படத்தில் குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திதான் விருமன். இந்த படத்தில் தந்தையான பிரகாஷ்ராஜ் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது தந்தையை தட்டி கேட்கும் நபராக கார்த்தி இருக்கிறாராம்.
விருமன் படம் ரிலீஸ்:
விருமன் படத்தின் பின்னணி பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்திவிடுமுறை நாளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றது.
கஞ்சா பூ கண்ணாலே' பாடல்:
இந்த நிலையில், விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள 'கஞ்சா பூ கண்ணாலே' என்ற பாடல் நடிகர் கார்த்தியின் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா பாடி இசையமைத்துள்ளார். இவருடன் சேர்ந்து சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும், இந்த பாடலை மணிமாறன் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடல் கார்த்தியின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.