“நீங்க எங்களுக்கு முக்கியம் தலைவா”... ரஜினியின் அதிரடி அறிவிப்பு குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்...!
இதையடுத்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து திரையுலகினர் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தார். அதற்குள் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை முடிப்பதற்காக ஐதராபாத் சென்றார். கடந்த 14ம் தேதி அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை என்றாலும், அவர் ஐதராபாத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
அப்படியிருக்க ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதற்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொள்ள வேண்டாம் என்றும், மன உளைச்சல் ஏற்படும் படியான வேலைகளில் ஈடுபடக்கூடாது, ஒருவாரம் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து திரையுலகினர் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தை, பேட்ட படத்தில் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தலைவா மோசமாக உணரவேண்டாம்.. உங்களை போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா. உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். எப்போதும் உங்களை நேசிக்கிறோம் என டச்சிங்காக ட்வீட் செய்துள்ளார். இதைப்பார்த்த ரஜினி ரசிகர்கள் பலரும் மெய்சிலிர்த்து போய் ஆதரவு கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.