கார்த்தி சுப்புராஜ் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கினார்.  இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள, இந்த படத்தை ஒய் நாட் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க உள்ளார். 

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு இயக்குனர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய உள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்னை நோக்கி பாயும் தோட்டா' , 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கி வரும் பெயரிடாத படம் ஆகியவை இந்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.