karthick naren twit for thamizhisai
ஏற்கனவே மெர்சல் பிரச்சனையில் இருந்து மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தமிழிசை திரும்பவும் ட்வீட் போட்டு வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளார்.
தற்போது தமிழிசை மீண்டும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், மெர்சல் திரைப்படம் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் மருத்துவர்களை கேலி பேசுவது போல் உள்ளது என்றும், ஆம்புலன்ஸ் ஊழியர்களை ஊழல் வாதிகளாக சித்தரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், மருத்துவர்களை 5 ருபாய் வாங்க சொல்லும் நீங்கள் மட்டும் ஏன் கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இவருடைய இந்த ட்விட்டருக்கு, துருவங்கள் 16 படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேன்.. "தவறு செய்தவர்களுக்கு தான் வலிக்கும்" அதே போல் பல அரசியல் வாதிகள் நடிகர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள் நீங்கள் அவர்களையும் கேட்கலாமே என கூறியுள்ளார்.
இவருடைய இந்த பதிலடிக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
