Asianet News TamilAsianet News Tamil

“சுல்தான்” பட லேட்டஸ்ட் அப்டேட்... செம்ம ஹேப்பியில் கார்த்தி ரசிகர்கள்...!

இந்நிலையில் கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

Karthi sultan teaser released on coming monday
Author
Chennai, First Published Jan 30, 2021, 4:51 PM IST

கடந்த ஆண்டு தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும், கார்த்தியின் ‘கைதி’ திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. வசூல் ரீதியாக ‘பிகில்’ திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேபோல் வசூல், விமர்சன ரீதியாக ‘கைதி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த ஆண்டும் கார்த்தி நடித்த சுல்தான், விஜய்யின் மாஸ்டர் படத்தோடு போட்டி போடும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் பொங்கல் ரேஸில் இருந்து சுல்தான் விலகியது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. 

Karthi sultan teaser released on coming monday

 இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சுல்தான்’. இந்த படம் மூலம் தெலுங்கு, கன்னடத்தின் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தமிழில் நடிகையாக அறிமுகமாகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். சுல்தான் படத்தின் ஷூட்டிங் 2019ம் ஆண்டே நிறைவுற்ற போதும், கொரோனா லாக்டவுனால் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெறாமல் தள்ளிப்போனது. 

Karthi sultan teaser released on coming monday

இறுதியாக பொங்கல் அன்று படம் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகின, ஆனால் அதனை தயாரிப்பாளர் தரப்பு மறுத்தது. இதனிடையே சுல்தான் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் அதனை ஓடிடியில் திரையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத ஆக்குபன்ஸியிலும் வசூல் சாதனை படைத்ததை அடுத்து, சுல்தான் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தைகள் கைவிடப்பட்டது. 

இதையும் படிங்க: “குக் வித் கோமாளி” நிகழ்ச்சிக்கு என்ன ஆச்சு?.... தேசிய அளவில் ட்ரெண்டாகும் #CookWithComali2 ஹேஷ்டேக்...!

தற்போது தமிழ் புத்தாண்டு விருந்தாக சுல்தான் திரைப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ‘சுல்தான்’ படத்தின் டீசர் வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios