நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் வா வாத்தியார் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது.
Vaa Vaathiyaar Release Date : நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான 'வா வாத்தியார்' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சூது கவ்வும்' என்ற வெற்றிப் படத்தின் மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கீர்த்தி ஷெட்டி 'வா வாத்தியார்' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம். குமார், ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் இப்படத்தின் மற்ற முக்கிய நடிகர்கள். சத்யராஜ் வில்லன் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது 'வாத்தியார்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 8 வருட இடைவெளிக்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கும் படம் இது. 'காதலும் கடந்து போகும்' தான் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம்.

வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி
90களில் வெளியான அனைத்து மசாலா படங்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக தனது படம் இருக்கும் என்று இயக்குனர் கூறியிருந்தார். அதே சமயம், 'வா வாத்தியார்' படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ இதன் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றுள்ளது. இப்படத்தில் கார்த்தி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக வருகிறார். விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற மெய்யழகன் படத்திற்குப் பிறகு கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம்தான் வா வாத்தியார்.
இந்நிலையில் வா வாத்தியார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 5ந் தேதி வா வாத்தியார் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள ஒரே படம் வா வாத்தியார் என்பது குறிப்பிடத்தக்கது. வா வாத்தியார் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது.
