இன்று வெளியாகும் சர்தார் ட்ரைலர்...கார்த்தியின் மாஸ் லுக்கில் வெளியான போஸ்டர்
இந்தப் படம் வருகிற அக்டோபர் 21ஆம் தேதிரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வனை தொடர்ந்து தற்போது கார்த்ததியின் சர்தார் படம் திரைக்கு வரவுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் வெளியாக உள்ள இந்த படம் ஆக்சன் ஸ்பை திரில்லர் என கூறப்படுகிறது. கார்த்தி தந்தை ,மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா மற்றும் முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் மூலம் இந்தி நடிகர் சங்கி பாண்டே தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். அதோடு 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்தார் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கிறார் லைலா.
மேலும் செய்திகளுக்கு...வலையை உடையாக அணிந்து பிளாக் அண்ட் ஒயிட் கவர்ச்சி பரப்பும் ரைசா வில்சன்
இந்த படம் வருகிற தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படம் குறித்து பேட்டி அளித்திருந்த கார்த்தி, தமிழ் சினிமாவில் பொதுவாக உளவாளி குறித்த கதைக்களம் வெளியாகுவதில்லை. இந்தப் படம் புதிய கோணத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என நம்புவதாகவும் இது உளவாளியாக இருக்கும் நாயகன் யாரையெல்லாம் உளவு பார்க்கிறார் என்பதே முக்கிய கதைகளாக இருக்கும் என கூறுகிறார்.
ஆயுதப்படை போலீஸ் என்பதுதான் நிஜ கேரக்டர் மற்றவை எல்லாம் போலீஸ் போடுகிற வேஷங்கள் எனவும் படம் குறித்த கதையை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் கார்த்தி. இந்தப் படம் வருகிற அக்டோபர் 21ஆம் தேதிரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...trisha : நெக்லஸ் கல் அழகா? திரிஷா கண் அழகா? கன்ப்யூஸாகும் ரசிகர்கள்